ETV Bharat / state

கிராமங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் - சுகாதாரத்துறை செயலர் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருநெல்வேலி: நகர்ப்புறங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதுபோன்று கிராமங்களிலும் அபராதம் விதிக்க வேண்டுமென சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

radhakrishnan
radhakrishnan
author img

By

Published : Aug 5, 2020, 8:51 PM IST

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 5) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாநகராட்சி ஆணையர் கண்ணன், நெல்லை மாநகர காவல்துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 7ஆயிரம் என்ற அளவில் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை டவுன் பகுதியில் 2ஆயிரத்து 300 தெருக்கள் உள்ளன. தற்போது, 160 தெருக்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

குறிப்பாக தென்மாவட்டங்களில் முகக் கவசம் அணிவதில் ஒரு சுணக்கம் இருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பாசமுத்திரம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கிராமங்களில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறு. நாள் ஒன்றுக்கு சராசரியாக 60ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பிற மாநிலங்களில் 15 நொடிகள் கொடுக்கக்கூடிய அன்டிஜன்ட் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 95 விழுக்காடு ஆர்டிபிசியார் கிட் மாநில அரசு கொள்முதல் செய்து எந்த தடையுமின்றி பரிசோதனை செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் 125 ஆய்வகங்கள் உள்ளன. இதில், நாள் ஒன்றுக்கு 92 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தற்போது ஒரு லட்சத்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 2ஆயிரத்து 626 படுக்கைகள் உள்ளன. நகர்ப்புறங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவது போன்று கிராமங்களிலும் அபராதம் விதிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ராமர் கோயில் பூமி பூஜை நாள் - ட்விட்டரில் ராவணனை உச்சிமுகர்ந்த தமிழர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.