திருநெல்வேலி: சேரன்மகாதேவி அருகே உள்ளது தெற்கு வீரவநல்லூர். இங்கு அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஊராட்சி செயலாளராகப் பணி செய்து வருகிறார். அதை ஊரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், தனது வீட்டு ரசீது பெயர் மாற்றம் செய்வதற்காக ஊராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்ததாகவும், பெயர் மாற்றம் செய்ய சண்முகசுந்தரத்திடம் ஊராட்சி செயலர் ரூபாய் 3000 லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம் நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். நேற்று காலை லஞ்ச பணம் ரூபாய் 3 ஊராட்சி செயலாளர் சொக்கலிங்கத்திடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞான ராபின்சன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக ஊராட்சி செயலாளரைக் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் சேரன்மாதேவி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிறுமியை வன்கொடுமை செய்த வேன் ஓட்டுநர் கைது!