ETV Bharat / state

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் திருவிழா... - Nelliappar Temple Festival started with Flag.

திருநெல்வேலி: பிரசித்திப்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

நெல்லையப்பர் கோயில்
author img

By

Published : Aug 29, 2019, 7:17 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்திப்பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இன்று தொடங்கி 11ஆம் தேதி வரை இத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

முன்னதாக கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடி மரியாதைகள் செய்யப்பட்டு காலை 7.30 - 9.00 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு தீபாரதனையும் நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் திருவிழா...

மேலும், வருகின்ற 1ஆம் தேதி அன்று ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும், திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கின்ற நிகழ்வு வரும் 8ஆம் தேதி ஆவணி மூலத்தன்று நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Intro:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியதுBody:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இன்று முதல் 08.09.19 ம் தேதி வரை 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. வருகிற 8ம் தேதி தேதி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி அளிக்கிறார். நெல்லுக்கு வேலியிட்டு காத்து திருநெல்வேலி என பெயர் வரக்காரணம் அமைய பெற்ற வரலாற்றுச் சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆவணி மூலத்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிபட்டம் வீதி உலா நடைபெற்றது. பின்னர் கொடி மரியாதைகள் செய்யப்பட்டு காலை 07.30 - 09.00க்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்ட கொடி மரத்திற்கு சோட~ தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் திருவிழாவையொட்டி சுவாமி அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வருகின்ற 01.9.19 4ம்திருநாள் அன்று ரி~ப வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதிஉலாவும், திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கின்ற நிகழ்வு வரும் 8 ம் தேதி தேதி ஆவணி மூலத்தன்று நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.