ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் நவராத்திரி திருவிழா: மொபைல் மூலம் தரிசனம்! - Mobile App

திருநெல்வேலி: பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் கோயில் நவராத்திரி விழாவை மொபைல் செயலியைப் பதிவிறக்கி அதன்மூலம் தரிசனம் செய்துகொள்ள வழிமுறை செய்யப்பட்டுள்ளது.

nellaiappar temple festival Mobile App
nellaiappar temple festival Mobile App
author img

By

Published : Oct 17, 2020, 8:13 PM IST

திருநெல்வேலி மாவட்டம் டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக மிக எளிதாக நவராத்திரி விழா நடைபெறுகிறது.

அதன்படி அருள்தரும் நவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு, 17.10.2020 முதல் 25.10.2020 முடிய, வழக்கம்போல் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவ மூர்த்திகள் திருக்கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, தினமும் முற்பகல் 11 மணியளவில் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும். இரவு 7 மணியளவில் சிறப்புத் தீபாராதனை நடைபெறும்.

அபிஷேகம், தீபாராதனை நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதர நேரங்களில் பக்தர்கள் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டிருக்கும் நவராத்திரி கொலுவைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.

உற்சவ மூர்த்திகளுக்கு செய்விக்கப்படும் இந்த அபிஷேகம், அலங்காரம், ஷோடச தீபாராதனைகள் ஆகியவற்றை பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நெல்லையப்பர் கோயில் அஃபிஷியல் என்கிற செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து அன்றாடத் திருவிழா நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு, காணொலித் தொகுப்பு ஆகியவற்றை கண்டும், கேட்டும் பயன்பெறலாம்.

முந்தைய தின நிகழ்வுகளை மறுதினம் யூ-ட்யூப் சேனல் நெல்லையப்பர் கோயில் நவராத்திரி விழா 2020 என டைப் செய்தும் கண்டு மகிழலாம். மேலும் நவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு லட்சார்ச்சனை இன்று (அக். 17) தொடங்கி வரும் 30ஆம் தேதிவரை தினமும் மாலை ஆறு மணியளவில் அம்மன் சன்னதியில் வைத்து நடைபெற உள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: ஸ்வப்னா சுரேஷ் மீது பாய்ந்த புது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.