ETV Bharat / state

நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக சரவணன் பதவியேற்பு! - திமுக கவுன்சிலர் சுப்பிரமணியன் மேயர் பதவியைக் குறிவைத்துக் காய் நகர்த்தி

திருநெல்வேலி மாநகராட்சியின் ஆறாவது மேயராக திமுக கட்சியின் சரவணன் பதவியேற்றுக் கொண்டார்.

நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக சரவணன் பதவியேற்றுக் கொண்டார்

author img

By

Published : Mar 4, 2022, 9:03 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சிக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான பி.எம்.சரவணன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சுப்பிரமணியன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு கவுன்சிலர் ஆகிய இருவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது புதிய மேயர் பதவி ஏற்பு விழா நெல்லை மாநகராட்சி ராஜாஜி மஹாலில் நடைபெற்றது.

அப்போது மேயராகத் தேர்வு செய்யப்பட்ட சரவணன், நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் இதற்கான கோர்ட் அணிந்து வந்தார். அவரை திமுக மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் வரவேற்று மேயர் இருக்கையில் அமர வைத்தார்.

பின்னர் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மேயர் சரவணனுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஆணையர் மேயருக்கான செங்கோலை சரவணனிடம் வழங்கினார். பின்னர் மேயர் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமை நெல்லை மாநகராட்சி துணை மேயராக 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜுவை அறிவித்தது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராஜுவைத் துணை மேயராக ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.

மேயர் பதவிக்கு ஆசைபட்ட திமுக கவுன்சிலர்

மேயர் தேர்தலில் கலந்து கொள்ளாத திமுக கவுன்சிலர் சுப்பிரமணியன் மேயர் பதவியைக் குறிவைத்துக் காய் நகர்த்தி வந்ததாகவும், ஆனால் கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே தேர்தலில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் துணை மேயர் பதவியையாவது எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையிலிருந்தார் எனவும் அறியப்படுகிறது.

நெல்லை மாநகராட்சியின் ஆறாவது மேயராக சரவணன் பதவியேற்றுக் கொண்டார்

ஆனால், அவருக்கு அந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. எனவே, துணை மேயர் தேர்தலில் ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் எனக் கருதி காவல்துறை பலத்த பாதுகாப்பு வழங்கினர். இருப்பினும் பெரும்பான்மை ஆதரவுடன் துணை மேயராக ராஜு தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பொ.மல்லாபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக - விசிக தொண்டர்கள் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.