ETV Bharat / state

ஆண்களை விட பெண்கள் 2 மடங்கு அதிகம் - மனோன்மணியம் பல்கலை சுவாரஸ்யம்! - ஆர் என் ரவி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Manonmaniam Sundaranar University
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு
author img

By

Published : Jul 15, 2023, 11:17 AM IST

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழா வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதில்,பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும் மாநில உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியும் கலந்து கொள்கிறார் என பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 29வது பட்டமளிப்பு விழா வருகிற 18ஆம் தேதி பல்கழைக்கழகத்தில் வைத்து நடைபெறுகிறது. கடந்த 2021 - 2022ஆம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.

அதில், 13 ஆயிரத்து 236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 861 பேர் பட்டம் பெற தகுதியானவர்களாக உள்ளனர். இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங்களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என மொத்தம் 1,053 நபர்களுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்குகிறார்.

காயல்பட்டினம் வாவு மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து இரண்டு பதக்கங்களை பெறுகிறார். இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். பாரத பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முனைவர் பிபேக் டெப்ராய் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது” என தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் மொத்தமாக 43 ஆயிரத்து 861 பேர் பட்டம் பெறும் நிலையில், இதில் 13,236 நபர்கள் மட்டுமே ஆண்கள், 30 ஆயிரத்து 625 பெண்கள் பட்டம் பெறுகின்றனர். அதாவது ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட ஈரோடு ஸ்மார்ட் சிட்டி வணிக வளாகம் - தற்போதைய நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.