ETV Bharat / state

தங்கத்தாள் கொண்டு ரூ. 2 லட்சத்தில் பிளம் கேக்; நெல்லை ஹோட்டல் உலக சாதனை

author img

By

Published : Dec 21, 2022, 9:35 PM IST

Updated : Dec 22, 2022, 4:15 PM IST

உலக அளவில் தங்கத்திலான மிகப்பெரிய சாக்லேட் பார், பிளம் கேக், சாக்லேட் பார் ஆகியவை தயாரித்து நெல்லை தனியார் நட்சத்திர ஹோட்டல் முப்பெரும் உலக சாதனை படைத்துள்ளது.

2 லட்ச ரூபாய் பிளம் கேக்; நெல்லை ஹோட்டல் உலக சாதனை
2 லட்ச ரூபாய் பிளம் கேக்; நெல்லை ஹோட்டல் உலக சாதனை
தங்கத்தாள் கொண்டு ரூ. 2 லட்சத்தில் பிளம் கேக்; நெல்லை ஹோட்டல் உலக சாதனை

நெல்லை: வண்ணாரப்பேட்டையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதியுடன் கூடிய உணவகத்தில் நெல்லையின் பிரபல பேக்கரி நிறுவனமான "ஆர்யாஸ் நிறுவனத்தின்" முப்பெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தாள் கொண்டு நான்கு அடி நீளத்தில் உலகிலேயே அதிக விலை கொண்ட தங்கத் தோசை தயாரிக்கப்பட்டு 20,230 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது.

அதேபோல் 250 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 5 கிலோ எடையுடைய உலகின் மிகப்பெரிய அளவிலான சாக்லேட் பார் தயாரிக்கப்பட்டு அதற்கு விலையாக ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

400 மில்லி கிராம் தங்கத்தாள் கொண்டு 100 கிலோ எடையில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான ரிச் பிளம் கேக் தயாரிக்கப்பட்டு அதற்கு ரூ.2.60 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பிரம்மாண்ட கண்ணாடி பேழையில் காட்சிப்படுத்தியது.

இதனை "அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட்" நிறுவனம் சார்பில் வந்த அதிகாரிகள் ஆய்வு செய்து உலக சாதனையை அங்கீகரித்து அந்த முயற்சிக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயத்தினை ஆர்யாஸ் நிறுவன உரிமையாளரிடம் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உலக சாதனை முயற்சி மேற்கொண்ட ஆர்யாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கிருஷ்ணா,”உலக அளவில் சாதனை செய்யும் முயற்சியில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டு முப்பெரும் உலக சாதனையை மேற்கொண்டுள்ளது.

சுமார் 13 மணி நேரம் முயற்சியில் இந்த உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்கத்தினாளான தோசையைத் தயாரித்துக் காட்சிப்படுத்தி உலக சாதனை மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே அது வாடிக்கையாளர் மூலம் விற்பனை ஆனது.

மீதமுள்ள தங்கத்தினால் தயார் செய்யப்பட்ட சாக்லேட் பார் மற்றும் ரிச் பிளம் கேக் ஆகியவை நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் இரண்டு நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிறிஸ்மஸ் தினத்தன்று ஆதரவற்ற ஏழை, எளிய குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"மத்திய அரசின் கூட்டுறவு சங்க திருத்த மசோதா, மாநில உரிமைகளைப் பறிக்கும்"

Last Updated : Dec 22, 2022, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.