ETV Bharat / state

காதலியின் கழுத்தை அறுக்க ஆன்லைனில் கத்தி ஆர்டர்.. நெல்லை இளம்பெண் கொலையில் அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்! - நெல்லை அரசு மருத்துவமனை

Nellai Girl Murder Case: நெல்லையில் காதலிக்க மறுத்த இளம்பெண்னை கழுத்தை அறுத்து கொலை செய்த விவகாரத்தில் கத்தியை சிறுவன் ஆன்லைனில் வாங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

காதலி கழுத்தை அறுக்க ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்த சிறுவன்;

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 11:59 AM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் இயங்கி வரும் பேன்சி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (அக் 2) கடைக்குத் தேவையான கூடுதல் பொருட்களை, அதே தெருவில் உள்ள குடோனில் இருந்து எடுக்கச் சென்றபோது அப்பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், நெல்லை டவுன் போலீசார் இளம்பெண் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின் கொலைக்கான காரணாம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், கொலை செய்த நபர் சம்பவ இடத்திலேயே கூர்மையான கத்தி போன்ற தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்.

ஏற்கனவே, அனுபவமில்லாத நபர்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வாய்பு இருந்திருக்க முடியும் என போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக, இளம்பெண் என்பதால் காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்கத்து கடையில் வேலை செய்து வந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் சந்தியாவுடன் நெருங்கி பழகியதாகவும், நாளடைவில் சந்தியா அவனை வெறுத்தாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தியாவுக்கு அச்சிறுவன் காதல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அச்சிறுவன் நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசார் தோப்பூர் சென்று தேடியபோது, அங்குள்ள காட்டுப் பகுதியில் அச்சிறுவன் பதுங்கியிருந்த நிலையில், அச்சிறுவனை கையும் களவுமாக பிடித்து வந்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளாது. இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதில் அச்சிறுவன் நெல்லை மாவட்டம் தோப்பூரைs சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளான்.

காதல் விவகாரம்: நண்பர்கள் மூலம் டவுனில் தற்போது கொலை செய்யப்பட்ட சந்தியா வேலை பார்த்த கடைக்கு அருகில் அச்சிறுவன் வேலைக்கு சேர்ந்துள்ளான். அப்போது சந்தியாவை அடிக்கடி சந்திக்க நேரிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் சந்தியாவை விரும்பிய சிறுவன், அவரிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் சந்தியாவும் சிறுவனின் காதலுக்கு தலையசைத்தாக கூறப்படுகிறது. மேலும், ஆரம்பத்தில் சந்தியா சிறுவனுடன் நெருங்கி பழகிய நிலையில், திடீரென அச்சிறுவன் டவுனில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளான். அதன் பிறகு சந்தியா திடீரென சிறுவனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். மேலும், சிறுவன் சென்னைக்கு சென்ற பிறகு, சந்தியா வேறொரு நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த சிறுவன், அடிக்கடி சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிலையிலும், தனக்கு உன்னை பிடிக்கவில்லை என சந்தியா தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனக்கு கிடைக்காத சந்தியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்றும், எனவே சந்தியாவை கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளான்.

சந்தியா வேலை செய்த டவுன் பகுதி 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பரபரப்பான பகுதி என்பதால், அரிவாள் போன்ற பெரிய ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியாது என்பதால், கத்தி போன்ற சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்துள்ளான்.

ஆன்லைனில் கத்தி ஆர்டர்: அதேநேரம், தான் ஒரு சிறுவன் என்பதால் கூர்மையான கத்தியை கடைக்குச் சென்று வாங்கினால் சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்பதால், ஆன்லைன் மூலம் கத்தியை ஆர்டர் செய்ய சிறுவன் முடிவெடுத்து, தனியார் ஆப் ஒன்றில் கூர்மையான கத்தியை வாங்கியுள்ளான்.

பின்னர், கத்தியை எடுத்துக் கொண்டு சிறுவன் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்துள்ளான். சந்தியா தினமும் கடையிலிருந்து குடோனுக்கு செல்வதை நன்கு அறிந்து வைத்திருந்த சிறுவன், சம்பவத்தன்று சந்தியாவின் வருகையை எதிர்நோக்கி குடோன் அருகே பதுங்கி இருந்துள்ளான். எதிர்பார்த்தபடி சந்தியா குடோனுக்குள் தனியாகச் சென்றவுடன், சிறுவன் அவரைப் பின் தொடர்ந்து குடோனுக்குச் சென்றுள்ளான்.

வெறிச்செயல்: குடோனில் வைத்து மீண்டும் தன்னை காதலிக்கும்படி சிறுவன் சந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளான். அப்போதும் சந்தியா திட்டவட்டமாக சிறுவனின் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிறுவன், கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தில் குத்தியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தியா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், சிறுவன் கத்தியை அங்கேயே விட்டுவிட்டு கையை துடைத்து விட்டு வேகமாக வெளியேறி, தனது சொந்த ஊரான தோப்பூருக்குச் சென்றுள்ளான். பட்டப்பகலில் சிறுமி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் கைது: தற்போது கைது செய்யப்பட்ட சிறுவன் இன்னும் 18 வயதை நிரம்பாததால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நெல்லை மாநகர காவல் துறையில் கடந்த இரண்டு மாதங்களாக காவல் ஆணையர் பதவி காலியாக உள்ளது.

கடைசியாக காவல் ஆணையாக பணிபுரிந்த ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் புதிதாக தற்போது வரை காவல் ஆணையர் நியமிக்கப்படவில்லை. மாறாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார்தான் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலும், தற்போது வரை காவல் ஆணையர் நியமிக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளம்பெண்ணை வீட்டில் பூட்டிவைத்து 4 பேர் பாலியல் வன்கொடுமை.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.