திருநெல்வேலி: மானூர் அருகே உள்ள காணார்பட்டியை சேர்ந்தவர்கள் சாமுவேல் - ஜான்சி தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி திருநெல்வேலியில் இருந்து தங்களது கிராமத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருநெல்வேலி கால்நடை ஆராய்ச்சி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜான்சி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாமுவேல் படுகாயங்களோடு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் டிப்பர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு