ETV Bharat / state

தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்!

திருநெல்வேலி: தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

author img

By

Published : Feb 26, 2021, 4:49 PM IST

பெண் குழந்தைகள் தின விழா
பெண் குழந்தைகள் தின விழா

தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலத் துறை சார்பில் நடைபெற்றது. இவ்விழாவினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் உயர் கல்வி மற்றும் பொருளாதார அதிகாரம் பெற்றவராக உலகை வலம் வரும் பெண்களை உருவாக்குவதற்குரிய உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, பெண்கள், குழந்தைகள் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து இணையவழியில் பெண் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்த 50க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ஷீல்டு வழங்கி பாராட்டினார். விழாவில் பெண் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளை தடுக்கவும், பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலின பாகுபாடு இன்றி சமத்துவ நிலையை ஏற்படுத்தவும், பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி பாதுகாப்பு அளிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினார்.

இதையும் படிங்க: 'மீன் உணவுத் திருவிழா' - இன்றுமுதல் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.