ETV Bharat / state

அண்ணாமலை வருங்கால முதலமைச்சரா? - நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன் என்ன? - veeran Alagumuthu Kone Guru Poojai

'வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணாமலை' என கோஷங்கள் எழுப்பிய நிலையில், இது ஒன்றும் தவறில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படலாம் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Jul 11, 2023, 5:23 PM IST

நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு

திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று (ஜூலை 11) தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அண்ணாமலை ரசிகர்கள் ஒரு வேகத்தில் அவரை 'வருங்கால முதலமைச்சர்' என்று அழைக்கிறார்கள்!.. அதில் தவறில்லை' என தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூடுவதால் அரசுக்கும் வருமானம் இழப்பு ஏற்பட்டாலும் இதை செய்ய வேண்டும் என்று கூறிய அவர், மதுக்கடைக்களின் நேரத்தையும் குறைக்க வேண்டும் என்றார். தேர்தலின்போது, திமுக பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறிய நிலையில், அதனை ஆட்சியில் அமர்ந்ததும் செய்யாமல் தற்போது விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு பின்னால், 500 மதுக்கடைகளை மூடியதாக குற்றம் சாட்டினார். ஒட்டுமொத்த மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல, ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது வேலையை செய்வதாகவும், இதில் ஆளுநரை எந்த வேலையையும் செய்யக்கூடாது என எதிர்பார்ப்பது சரியல்ல என்று தெரிவித்தார். இது தொடர்பாக, கடிதம் எழுதுவதற்கென ஒருமுறை உள்ளதாகவும், ஆளுநரின் செயல்பாட்டில் எவ்விதமான குந்தகமான வார்த்தைகளும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கண்டிப்பாக, பொது சிவில் சட்டம் நாட்டில் எல்லோருக்கும் வேண்டும் என்று கூறிய அவர், தற்போதைய சட்டம் தவறானது என்றும் இதை யார் எழுதியிருந்தாலும் தவறானது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியை கலைப்போம் என்று யாரும் கூறவில்லையே என்றும் முதலமைச்சர் இவ்வாறு ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று கூறினார்.

கோவை டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்த விவகாரத்தில், இவ்வாறு டிஐஜியே தற்கொலை செய்கிறார் எனில், இது சரியான நடைமுறையல்ல என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறைக்கு முழு அதிகாரம் அளித்து சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்தவுடன் தருவதாகவும், அடுத்து அண்ணா பிறந்த நாளில் தருவதாக கூறிவிட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், இந்த மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.