திருநெல்வேலி: பேட்டை அருகே திருப்பணி கரிசல்குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் அருகே தேவர் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (நவ. 7) நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தேவர் படத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இன்று (நவ. 8) காலை கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒரு தரப்பினர் அப்பகுதியில் குவிந்தனர். மேலும் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தகவல் அறிந்த நெல்லை டவுன் உதவி ஆணையர் விஜயகுமார் மற்றும் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆரோவில் பகுதியில் 3 வெண்கல சிலைகள் பறிமுதல்: ஜெர்மன் தம்பதியிடம் விசாரணை