இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்படுகின்றன. ஒருங்கிணைந்து ஐந்து வருட முதுகலை பட்டப்படிப்பு, டி -பார்ம்(D.pharm) பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கு 31.07.2020 வரையிலும், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஏனைய படிப்புகளுக்கு 10.08.2020 வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி மாணவர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஏனைய படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு 12.08.2020 அன்று ஆன்லைன் மூலம் நடைபெறும்.
மற்ற விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தொலைபேசி ( 0462 -2333741, 2563063, 9443695573, 9965178458, 9487410736) மூலமாகவோ அல்லது www.msuniv.ac.in என்ற இணைதளத்தில் மூலமாக அறிந்து கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 6,472 பேருக்கு கரோனா உறுதி