திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொறியியல் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது.
இதன்பின்னர், அவர் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அவர், தினமும் பல்கலைக்கழகம் வந்து சென்றவர் என்பதால் சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக மூன்று நாள்கள் பல்கலைக்கழகத்தை மூடுமாறு துணைவேந்தர் பிச்சுமணி உத்தரவிட்டார்.
ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட அலுவலகப் பணிகளைப் பார்ப்பதற்காக போராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் தினமும் பல்கலைக்கழகம் வந்துசென்றனர். தற்போது, பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்களின் அடக்குமுறைக்கு ஆளான இளைஞருக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை முற்றுகை போராட்டம்!