Tamilnadu by election 2019: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற விருக்கிறது . அதில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தேர்தல் பொறுப்புக் குழுத் தலைவர் வசந்தகுமார் எம்.பி., எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முஹைதீன் ஆகியோரை நெல்லை எஸ்டிபிஐ அலுவலகத்தில் சந்தித்தார். சில மணிநேரம் நிகழ்ந்த இச்சந்திப்பில் நாங்குநேரி வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சிக்கு வசந்தகுமார் கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்வின் போது காங்கிரஸ் கட்சி, எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக ஐநாவில் கர்ஜித்த மதுரை மாணவி!