நெல்லை வள்ளியூர் பகுதிகளில் கோட்டையடி, சமத்துவபுரம், அண்ணா நகர், குமார புது குடியிருப்பு, ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகில் உள்ள பகுதி என 6 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொடிக்கம்பம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முறையாக அனுமதிபெறவில்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினர் 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மாவட்டச்செயலாளர் தயாசங்கர் தலைமையில் வள்ளியூரில் தபால் நிலையம் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வள்ளியூர் டி.எஸ்.பி யோகேஸ்குமார், நாங்குநேரி ஏ.எஸ்.பி சதுர்வேதி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை தோல்வி அடையவே மாவட்ட எஸ்.பி. சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகசொன்னார். அதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத்தலைவர் தயாசங்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது.
இதையும் படிங்க:வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை...