திருநெல்வேலிக்கு வந்த தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வண்ணாரபேட்டை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”முதலமைச்சர் வெளிநாடு சென்றதை ஸ்டாலின் குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தொழில் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற அடிப்படையில் சென்னை கன்னியாகுமரி இடையே தொழில் வழி முன்னேற்ற சாலை அமையவுள்ளன. இது அமைந்தால் , சென்னை - குமரி தொழில் வழி முன்னேற்ற சாலை முதன்மை பெற்ற இடமாக இருக்கும். தமிழ்நாட்டில் தொழில் துறை மிகவும் சிறப்பாக உள்ளது” என்றார்.