ETV Bharat / state

நெல்லையில் பால் வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை.. நடந்தது என்ன? - சாலை மறியல் போராட்டம்

Tirunelveli Milk Man Murder: நெல்லையில் பால் வியாபாரியை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை
பால் வியாபாரி கண்ணன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 8:44 AM IST

திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). பால் கறவை தொழில் செய்து வந்த இவர் நெல்லையப்பர் கோயிலில் உள்ள கோசாலை பராமரிப்பு பணிகளையும் தற்காலிகமாக பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.01) இரவு வழக்கம்போல் கோயில் பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், வெளியில் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், கண்ணன் தப்ப முயன்ற போது அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள், கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு, நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றுவதற்கு முயற்சித்தபோது, உயிரிழந்த கண்ணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், கொலை செய்ததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர்கள் ஆதர்ஷ் பச்சேரா மற்றும் சரவணகுமார் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் போச்சுவார்த்தை நடத்தி இறந்தவரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர்.

அதனைத்தொடர்ந்து, நெல்லை டவுன் போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு, கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், நெல்லை டவுன் பகுதியில் பால் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.