திருநெல்வேலி: பால் கட்டளையைச் சேர்ந்த கொத்தனார் பேச்சி ராஜா (24), தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் காலை 9.15 மணி அளவில், தச்சநல்லூர் பைபாஸ் சாலை வழியே அவர் சென்றுகொண்டிருந்த போது, அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேச்சிராஜா உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பால் கட்டளை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் - மோசடி கும்பல் கைது