ETV Bharat / state

நெல்லை லாலா கடைகளில் இனிப்பு தயாரிப்பு மும்முரம்.. தீபாவளிக்கு புது வரவுகள் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 10:11 PM IST

Diwali New Sweets Varieties: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிரேப்ஸ் ஜாங்கிரி உள்ளிட்ட புது ரக இனிப்பு பலகாரங்களை அறிமுகப்படுத்தும் திருநெல்வேலி லாலா கடைகள் குறித்த சிறப்புத் தொகுப்பை இதில் காணலாம்.

திருநெல்வேலியில் தடபுடலாக தயாராகும் புது இனிப்பு ரகங்கள்

திருநெல்வேலி லாலா கடைகள்

திருநெல்வேலி: பொதுவாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு பொருட்கள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் மட்டும், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், அனைத்து பொருட்களுமே சிறப்பு வாய்ந்ததாகவும், உலகப் புகழ் பெற்றதாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி என்றாலே அல்வா, நெல்லையப்பர் கோயில், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு, காருக்குறிச்சி மண்பாண்டம், கல்லிடைக்குறிச்சி அப்பளம், பத்தமடை பாய் என பல சிறப்புகள் அடங்கியிருக்கிறது. அந்த வரிசையில், திருநெல்வேலியின் ஸ்வீட்சும் தனி சிறப்பு வாய்ந்த ஒன்று.

மேலும், தமிழகத்திலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஸ்வீட்ஸ் மற்றும் பலகாரம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பாகும். குறிப்பாக திருநெல்வேலி ஸ்வீட்ஸ் என்றாலே லாலா கடைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.

2k கிட்ஸ்கள் வாழும் இந்த நவீன காலத்தில் பேக்கரி, டீ ஷாப், கபே என இனிப்பு பலகார கடைகளுக்கு பல புது பெயர்கள் சூட்டப்பட்டாலும் கூட, திருநெல்வேலியில் இன்றளவும் இனிப்பு பலகாரம் என்றாலே, லாலா கடைகள் என்று தான் மக்கள் பாரம்பரியத்தோடு அழைப்பார்கள். அதிலும், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே, லாலா கடைகளுக்கு மவுசுகள் கூடிவிடும்.

அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகளும், இனிப்பு பலகாரங்களும் தான் அனைவர் மனதிலும் நினைவுக்கு வரும். தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமோடு எண்ணெய் குளியல் செய்து, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்பு பலகாரங்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவர்.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள லாலா கடைகளில், தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. திருநெல்வேலி டவுன் பகுதிகளில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த லாலா கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், பாரம்பரியம் வாய்ந்த நெல்லையப்பர் கோயில் ரத வீதியில், வாகையடி முக்கு லாலா கடை நூற்றாண்டுகளை கடந்து, நான்கு தலைமுறையாக இனிப்பு பலகார விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில் பல புது ரக இனிப்பு பலகாரங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற புது இனிப்பு பலகாரத்தை, வாகையடி முக்கு லாலா கடை தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது வழக்கமாக ஜாங்கிரி என்றாலே உளுந்து அரைத்து செய்வார்கள். ஆனால் இதில், உளுந்துடன் திராட்சை பழம் சேர்த்து அரைத்து, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற பெயரில் புது ரக பலகாரத்தை வாகையடி லாலா கடை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் கிரேப்ஸ் ஜாங்கிரி, தீபாவளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

மேலும், திருநெல்வேலி ஸ்வீட்ஸ் என்றாலே நமது நினைவிற்கு முதலில் வருவது இருட்டுக்கடை அல்வா தான். இங்குள்ள இருட்டுக்கடை அல்வா உலகப்புகழ் பெற்றது. அந்த வகையில் கேரட் அல்வா, பூசணி விதை அல்வா, பால் அல்வா என அல்வாக்களிலும் பல ரகங்களை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளனர்.

நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு லாலா கடைகளில் இனிப்பு பலகாரங்கள் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் தீபாவளியை முன்னிட்டு தங்கள் குடும்பத்திற்கு தேவையான இனிப்பு பலகாரங்களை இப்போதே ஆர்டர் கொடுத்து வருகின்றனர். அதேபோல் திருநெல்வேலியில் கை சுற்றல் முறுக்கு, மிகவும் சிறப்பு வாய்ந்த பலகாரமாகும்.

எந்திரமயமான இந்த காலத்தில், பெரும்பாலான ஊர்களில் மிஷின் மூலமாகவே முறுக்கு சுடுகின்றனர். ஆனால் திருநெல்வேலி பாளையங்கோட்டை டவுன் பகுதிகளில், தற்போது வரை கை சுற்றல் முறுக்க சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மிஷினில் போடும் முறுக்கு இரண்டு, மூன்று நாட்களில் கெட்டுவிடும். ஆனால் இந்த கையால் சுற்றி போடப்படும் முறுக்கு, பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில், கை சுற்றல் முறுக்கு போடும் பணியில் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கூட்டமாக அமர்ந்து இந்த முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீபாவளியை முன்னிட்டு முறுக்கு மொத்தமாக ஆர்டர் வந்து கொண்டிருப்பதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும், தல தீபாவளி கொண்டாடும் புதுமணத் தம்பதிகளுக்கு, மணப்பெண்ணின் வீட்டார் இனிப்பு பலகாரங்கள் அதிக அளவில் வாங்கி சீர் கொடுப்பர். எனவே, இனிப்பு பலகாரம் தயார் செய்யும் வியாபாரிகள், தீபாவளி விற்பனைக்காக முழு வீச்சில் ஊழியர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, நான்கு தலைமுறையை கடந்து இனிப்பு பலகாரம் விற்பனையில் ஈடுபட்டு வரும் டவுன் வாகையடி லாலா கடை உரிமையாளர் நயன்சிங் கூறுகையில், “திருநெல்வேலி என்றாலே அல்வா பேமஸ். இதேபோல் இனிப்பு பலகாரமும் இங்கு பேமஸ் தான். நாங்கள் நூறு ஆண்டுகளை கடந்து நான்கு தலைமுறையாக லாலா கடை நடத்தி வருகிறோம்.

இந்த லாலா கடை என்பது மக்கள் வைத்த பெயர் தான். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, கிரேப்ஸ் ஜாங்கிரி என்ற புது வகையான இனிப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். தீபாவளி விற்பனை இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என நம்புகிறோம். மக்கள் ஆர்வமுடன் எங்களை தேடி வருகின்றனர்” என பெருமையோடு தெரிவித்தார்.

இது குறித்து கை சுற்றல் முறுக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் சித்ரா கூறுகையில், நான் பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கை சுற்றல் முறுக்கு பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால் மெஷினில் போடப்படும் முறுக்கு இரண்டு, மூன்று நாட்களிலேயே கெட்டுவிடும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே 6 இரும்பு தூண்கள் அமைக்கும் பணி நிறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.