திருநெல்வேலி: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்கள் அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலியில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
-
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— Udhay (@Udhaystalin) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க… pic.twitter.com/Bbj5kLaSGk
">திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க… pic.twitter.com/Bbj5kLaSGkதிருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை வண்ணாரப்பேட்டை மணிமூர்த்தி நகர் மக்கள், தச்சநல்லூரில் இருக்கும் திருமண மண்டபத்தில் தங்க… pic.twitter.com/Bbj5kLaSGk
அப்போது பேசிய திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, “குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் இருக்கும் மக்களைப் பத்திரமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாடி வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியேற மாட்டோம் என வீடுகளுக்குள்ளேயே உள்ளனர். மக்களைப் பத்திரமாக மீட்டு அழைத்துச் செல்வதற்குத் தேவைக்கு அதிகமான அளவிலேயே படகுகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் விவரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திருநெல்வேலி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் 3 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது” என்றார்.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “திருநெல்வேலி மாவட்டத்தில் 36 கிராமங்கள், 2 பேரூராட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் தண்ணீருடைய வேகத்தின் காரணத்தால் தாமிரபரணி உடன் இணையக் கூடிய ஆறுகளிலிருந்து வரக் கூடிய நீரின் மூலமும், அதிகரித்துவரும் மழை நீரின் மூலமும் தாமிரபரணியின் வேகம் அதிகரித்து நிறைய இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
-
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை… pic.twitter.com/ORwO1R8EUc
">திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை… pic.twitter.com/ORwO1R8EUcதிருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த அதிக கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ள நிலையில் அதன் பாதிப்பை நேரில் ஆய்வு செய்தோம்.
— Udhay (@Udhaystalin) December 18, 2023
அங்கு தேங்கியுள்ள தண்ணீரை… pic.twitter.com/ORwO1R8EUc
மழைப்பொழிவு இருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற மக்கள் முதலில் வெளியேற வேண்டும் எனத் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், மக்கள் பலவித காரணங்களால் அங்கேயே இருப்பதால் சில சிரமங்களை நாம் இன்று சந்தித்துள்ளோம். இருந்தாலும் கூடுமானவரை அனைவரையும் வெளியேற்றி வருகிறோம். தண்ணீரின் ஓட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீரைக் கடக்க முயற்சிக்க வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகள் மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளன. அதனால் மக்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
கால்வாய்கள் தூர்வாருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், “பருவமழை முன்னேற்பாடாகப் பாளையங் கால்வாய் முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ளது. நெல்லை கால்வாய் பெரும்பாலான பகுதிகள் தூர்வாரப்பட்டுள்ளது. மணிமுத்தாறு கால்வாயும் தூர்வாரப்பட்டுள்ளது. கால்வாய்களில் காங்கிரீட் அமைக்கும் திட்டம் தான் அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுக் கடந்த ஒரு வார காலமாக சென்று கொண்டுதான் உள்ளது. கால்வாய்களில் பிரச்சினை இல்லை. எல்லா பகுதிகளிலும் முழு வீச்சில் கால்வாய்களில் தண்ணீர் சென்று கொண்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.
கோயம்புத்தூரில் பேசிய முதலமைச்சர் சென்னையைப் போல் தென் மாவட்டங்களையும் காப்போம் எனத் தெரிவித்துள்ளார். சென்னை வெள்ளத்திலும் பணியாற்றியுள்ள நீங்கள் தென் மாவட்ட வெள்ளத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பாதுகாப்பது தான் அரசின் கடமை, அதுதான் முதலமைச்சரின் ஒரே எண்ணம். முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து நிவாரணத் தொகையைக் கேட்க உள்ளார்கள்.
ஏற்கனவே சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கும் நிவாரணம் கேட்டிருந்தோம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து முதலமைச்சரிடம் அறிக்கை அளித்த பின் இந்த மாவட்டத்திற்கான நிவாரண உதவிகள் குறித்து முதலமைச்சர் தெரிவிப்பார்” எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “பாதுகாப்பு காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பால் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பால்வளத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கனமழையால் பாதித்தவர்களுக்கு விரைந்து நிவாரணம் அளிக்க இபிஎஸ் வலியுறுத்தல்