ETV Bharat / state

நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை - குற்றாலத்தில் குளிக்கத் தடை! - nellai rain

நெல்லை: நீண்ட நாட்களுக்கு பிறகு நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

rain
author img

By

Published : Jun 10, 2019, 11:28 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியபோதும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் மழை இல்லாமல் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக, நெல்லை மாநகர பகுதியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர் குறைந்தது. கடந்த மூன்று நாட்களாக வாட்டி வதைத்த கோடை வெயில் இன்றும் வழக்கம் போல் கொளுத்தியது.

இந்நிலையில், இன்று மாலை மூன்று மணிக்கு மேல் இந்த தட்பவெப்ப நிலை மாறி வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டது. பேட்டையில் பெய்யத் துவங்கிய மழை படிப்படியாக மாநகரின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் நெல்லை டவுன், வண்ணார் பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நெல்லையில் பெய்த கனமழை

இதனிடையே மழையின் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்விநியோகம் அவ்வப்போது தடைபட்டது. இருப்பினும் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெய்த கனமழையால் பூமியின் வெப்பம் தணிந்ததோடு மக்கள் மனமும் குளிர்ந்தது. இந்த பலத்த மழை காரணமாக குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கனமழையால் குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் சாலையில் பெருக்கெடுத்த மழைநீர் குளம் போல் தேங்கிநின்றது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பசலன மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை பெய்துள்ள போதும் நெல்லை மாநகர பகுதியில் மழையில்லை. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் இந்த சீசனில் ஓரளவு மழை பெய்தது. குறிப்பாக, நெல்லை மாநகர பகுதியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர் குறைந்தது. கடந்த வாரத்தில் ஒரு நாள் மட்டுமே மிதமான மழை பெய்தது.

மேலும் கடந்த 3 நாட்களாக கோடை போல் வெயில் வாட்டி வதைத்தது. காலை முதல் வெயில் கொளுத்தியது. புழுக்கத்தால் மக்கள் தவித்தனர். ஆனால், மாலை 3 மணிக்கு மேல் இந்த தட்பவெப்ப நிலை மாறியது. வானில் கரு மேக கூட்டங்கள் திரண்டதால் இருளடையத் தொடங்கியது. பேட்டையில் பெய்யத் துவங்கிய மழை படிப்படியாக மாநகரின் பெரும் பாலான பகுதிகளிலும் பெய்தது. பேட்டையில் பெய்த கனமழையால் பெருக் கெடுத்த மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல், சுத்தமல்லி, நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, முருகன் குறிச்சி, தச்சநல்லூர், மேலப்பாளையம், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதே போல் களக்காடு, வள்ளியூர், நாங்குநேரி, மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஏர்வாடி, அம்பை, பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மழை பெய்தது. இதனிடையே மழையின் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்விநியோகம் அவ்வப்போது தடைபட்டது. இருப்பினும் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெய்த கனமழையால் பூமியின் வெப்பம் தணிந்ததோடு மக்கள் மனமும் குளிர்ந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.