ETV Bharat / state

மொபைல் செயலி மூலம் மோசடி: அரசு பள்ளி ஆசிரியை உட்பட இருவர் கைது

நெல்லையில் மொபைல் செயலி மூலம் சக ஆசிரியர்களின் வங்கி கணக்கு எண்களை திருடி 54 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைது
இருவர் கைது
author img

By

Published : Aug 5, 2022, 3:46 PM IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (57). இவர் வீரவநல்லூர் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஆசிரியராக பணிபுரியும் சேரன்மகாதேவி, காலங்கரை தெருவை சேர்ந்த லீனா (57) என்பவரும் அவருடைய சகோதரி பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த சலோமி (60) ஆகிய இருவரும் சேர்ந்து TNEMIS App என்ற செயலி மூலமாக தங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்றுள்ளனர்.

பின்னர் சேரன்மகாதேவியில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களின் முகவரியில் அவர்களுடைய புகைப்படத்தை மாற்றியும், ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பத்தை போட்டு சங்கத்தில் ரூ.54 லட்சம் கடனாக பெற்று பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர் பேச்சியப்பன் பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து விசாரணை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஆசிரியை லீனா மற்றும் அவரது சகோதரி சலோமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இதையும் படிங்க: கருமுட்டை விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.