ETV Bharat / state

'Fast and Furious' பட பாணியில் ரூ1.5 கோடி பணம் கொள்ளை! - கொள்ளை சம்பவம்

நெல்லை அருகே நகை வியாபாரியிடம் 'Fast and Furious' பட பாணியில் இரண்டு கார்களில் வந்த கும்பல் ரூ.1.5 கோடி பணம் கொள்ளை அடித்து சென்ற நிலையில், கொள்ளையர்களை 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 30, 2023, 7:16 PM IST

Updated : May 30, 2023, 7:37 PM IST

ரூ1.5 கோடி பணம் கொள்ளை; கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருநெல்வேலி: நகை வியாபாரியிடம் மிளகு தெளிப்பானை (Pepper spray) தெளித்து இரும்பு கம்பியால் தாக்கி ரூ.1.5 கோடியை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் பகுதையைச் சேர்ந்தவர் சுஷாந்த் (40). இவர் நெல்லையில் 'சோனா சித்' என்ற தங்கத்தின் தரத்தன்மையை சோதனை செய்யும் கடை வைத்துள்ளார். இதனிடையே தங்க நகைகளை விற்பனையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம், நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் உதவியாளர் விசால் என்பவருடன் இன்று (மே 30) சென்றுள்ளார். அப்போது நெல்லையிலிருந்து இவரது காரை முன்னும் பின்னுமாக இரண்டு கார்கள் விடாமல் பின் தொடர்ந்து வந்துள்ளன.

இத நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென இரண்டு கார்களில் வந்த முகமூடி அணிந்த கும்பல், சுஷாந்தின் காரை வழி மறித்து காரின் கண்ணாடியை உடைத்து சுஷாந்த் மற்றும் அவரது உதவியாளர் விசால் ஆகிய இருவர் மீதும் மிளகு தெளிப்பான் (Pepper spray) தெளித்து, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காரில் உள்ள ரூபாய் 15 லட்சம் வீதம் 10 கட்டுக்களாக இருந்த ரூபாய் 1.5 கோடியை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் பணத்தோடு சுஷாந்த் காரையும் கடத்திச் சென்று விட்டனர். அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளது. தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள், சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர்.

அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்திவிட்டு, அதில் இருந்த பண கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனிடைய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த், பயத்தில் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சுஷாந்தின் குடும்பத்தினர் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நாங்குநேரி ஆய்வாளர் செல்வி மற்றும் மூன்றடைப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர், சுஷாந்திடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தொழில் நடத்தும் சோனா சித் தங்கம் பரிசோதனை நிலையம் மற்றும் திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள சில நகைக்கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கொள்ளையர்கள் காரில் மின்னல் வேகத்தில் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் தொடர் கதையாகி வரும் தங்கம் கடத்தல்.. ஹேர் டை கிரைண்டர் தங்கம் கடத்திய நபர் கைது!

Last Updated : May 30, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.