ETV Bharat / state

‘ஓட்டுரிமை வேண்டாம், தண்ணீர் தான் வேண்டும்’.. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்! - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரை அணைகளிலிருந்து திறந்து விட கோரி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுரிமை வேண்டாம், தண்ணீர் தான் வேண்டும்..வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்ட விவாசாயிகள் போராட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:03 PM IST

Updated : Sep 1, 2023, 5:37 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து கடந்த ஜூலை 19ஆம் தேதி நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கடந்த ஆக.4 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால், நெற்பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து வரும் தண்ணீர் கோடகன் கால்வாய், கன்னடியன் கால்வாய், மேலழகியான் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், பாளையங் கால்வாய் போன்ற கால்வாய்களில் பாய்ந்து சுமார் 80ஆயிரம் ஏக்கர் பாசன வசதியை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மேற்கண்ட கால்வாய்களை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கன்னடியன் கால்வாய் மூலமாக சுமார் 12ஆயிரத்து 500 ஏக்கர் பாசன வசதி பெறும் விவசாயிகள் தண்ணீர் திறக்கவில்லை என்றால் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி வாக்களார் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக விவசாயிகள் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இந்நிலையில், பத்தமடை பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும், சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கச் சென்றனர். ஆனால், அதிகாரிகள் அவற்றை வாங்க மறுத்து விட்டனர். இதனால், வேறு வழியின்றி அவற்றை அங்கே வைத்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “எங்களுக்கு ஓட்டர் ஐடி வேண்டாம் தண்ணீர் தான் வேண்டும்” என்றனர். தொடர்ந்து, “தண்ணீர் திறக்காவிட்டால் அடுத்தக் கட்டமாக குடும்ப அட்டைகளை ஒப்படைத்து விடுவோம்” என தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை, ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, “அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. 48 அடி அளவு தண்ணீர் உள்ளதால் தற்போது தண்ணீர் விவசாயத்துக்கு கொடுக்க முடியவில்லை. குடிநீருக்கு தான் முன்னுரிமை கொடுக்க முடியும்.

தற்போது உள்ள தண்ணீரை வைத்து 15 முதல் 20 நாள்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வழங்க முடியும். மேலும், தண்ணீர் இல்லாவிட்டால் தண்ணீர் கேட்க மாட்டோம் என ஏற்கனவே விவசாயிகள் எழுதி கொடுத்துள்ளனர். பலர் நிலைமையை புரிந்து கொண்டனர் சிலர் புரியாமல் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: Congo violence: காங்கோவில் நிகழ்ந்த வன்முறையில் 26 பேர் பலி!

Last Updated : Sep 1, 2023, 5:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.