ETV Bharat / state

'மு.க. ஸ்டாலின் நல்லாட்சி நடத்திவருகிறார்'- துரை வைகோ - தவறு நடந்தால் மதிமுக தனது கருத்தை தெரிவிக்கும்

10 மாதங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சி நடத்திவருகிறார். ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிக்கும் என்று அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ பரபரப்பு பேட்டி durai-vaiko-says-cm-stalin-has-running-good-government-in-this-10-months தவறு நடந்தால் மதிமுக தனது கருத்தை தெரிவிக்கும்  முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார்
durai-vaiko-says-cm-stalin-has-running-good-government-in-this-10-months தவறு நடந்தால் மதிமுக தனது கருத்தை தெரிவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார்
author img

By

Published : Apr 13, 2022, 11:30 AM IST

Updated : Apr 13, 2022, 12:34 PM IST

திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய மாவட்ட மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் நிஜாம் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து துரை வைகோ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பத்து வருடமாக எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் மதிமுக இருந்து வந்துள்ளது. தற்போது மாநிலங்களவை தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளில் மதிமுகவினர் உள்ளனர்.

திமுக தலைமை மதிமுக மீதும் வைகோ மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளது. மக்களுக்கு மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு திமுக கூட்டணி மிக முக்கியமானதாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதெல்லாம் பகல்வேஷம். கர்நாடகா பாரதிய ஜனதா அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுப்பதற்குத் தமிழ்நாடு பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

'மு.க. ஸ்டாலின் நல்லாட்சி நடத்திவருகிறார்'- துரை வைகோ

மேலும், 10 மாதங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் துபாய் சென்று 132 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுப் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிக்கும். மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுத்து மக்கள் மனதில் இடம் பெறும் நடவடிக்கையை வருங்காலத்தில் நாங்கள் மேற்கொள்வோம்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'CUET' நுழைவுத் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Last Updated : Apr 13, 2022, 12:34 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.