திருநெல்வேலியில் கடையநல்லூர் நகராட்சியில் கடந்த வாரம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் மதரீதியாகவும், சாதி ரீதியாகவும் பேசியுள்ளதாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் இதனை வன்மையாக கண்டித்துள்ளார். இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதில் குறிப்பாக புகார் தெரிவிக்க வந்தவர் காவி துண்டு அணிந்திருப்பது மேலும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
காவி துண்டு அணிந்திருந்தவரிடம் பேசிய ஆணையாளர், "அரசு அலுவலகத்திற்குள் சாதி, மதத்திற்கு இடம் இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு என்றால் அதனை மட்டும் கூற வேண்டும். அரசு அலுவலகம் என்பது அனைத்து சமூகத்தினருக்கும் மதத்திற்கும் சமமானது" என்றும் கூறினார்.