ETV Bharat / state

மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ - dmk attrocity

கட்சிக்காரருக்கு ஆதரவாக எதிர்மனுதாரரை மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்

author img

By

Published : May 24, 2022, 8:11 PM IST

நெல்லை: டவுன் மாதா மேல தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் சங்கர் இரு தரப்புக்கும இடையே நீண்ட நாட்களாக இடப் பிரச்சனை இருந்து வருகிறது அந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அந்த இடத்தில் கட்டிடங்கள் கட்ட நீதிமன்றம் தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சங்கர் மற்றும் அவரது சகோதரி சண்முகசுந்தரி ஆகியோர் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரியின் மகன் விக்னேஷ் (28) வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டிடம் கட்ட கூடாது என்று சங்கர் தரப்பிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்தியபோது அங்கு வந்த சங்கரின் வழக்கறிஞர் நவ்ஷாத் மண் வெட்டியை கொண்டு விக்னேஷை ஓங்கி வெட்ட பாய்ந்தார். அதிஷ்டவசமாக, விக்னேஷ் விலகி விட்டார் தொடர்ந்து சங்கர் மற்றும் அவர் தரப்பைச் சேர்ந்த சிலர் விக்னேஷை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்

பதிலுக்கு விக்னேஷூம் சங்கர் தரப்பை தாக்கினார் இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கறிஞர் நவ்ஷாத் மீது கொலை முயற்சி வழக்கு (307) பதிவு செய்தனர் மேலும் விக்னேஷை தாக்கிய சங்கர் அவரது சகோதரி சண்முக சுந்தரி மற்றும் ஷேக் மைதீன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் சங்கர் அளித்து புகாரின் பேரில் விக்னேஷ் அவரது தாய் உமா மகேஸ்வரி, கோபிநாத், உச்சி, மாரி, ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்னேஷை மண் வெட்டியால் வெட்ட பாய்ந்த வழக்கறிஞர் நவ்ஷாத் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார் இருதரப்பினர் சண்டை போடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. எதிர் மனுதாரரை ஆயுதத்தால் தாக்க முயன்ற திமுக வழக்கறிஞரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.