ETV Bharat / state

’ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தது பொய்’ - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - திருநெல்வேலி அரசு மருத்துவமனை

திருநெல்வேலி: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவல் தவறானது என்றும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

corona
corona
author img

By

Published : May 13, 2021, 8:46 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் வெறும் மூன்று பேர், நான்கு பேர் மட்டுமே உயிரிழப்பதாக கணக்கு காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மொத்தம் 1,240 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதனால் தினசரி ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைக் கல்லூரியில் 19 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் கரோனா நோயால் சராசரியாக 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (மே.12) ஆக்ஸிஜன் இல்லாததால் 13 பேர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த்த் தகவல் முற்றிலும் பொய்யானது என அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர் "ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 பேர் இறந்ததாகக் கூறப்படும் தகவல் தவறானது. அது போன்று ஒரு சம்பவம் நடக்கவில்லை" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.