கரோனோ தொற்று காரணமாக, நாடு முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைத்தனர்.
நெல்லை வண்ணாரப்பேட்டை, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நெல்லை அரசு மருத்துவமனையும் வெறிச்சோடி இருந்தது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்கும் சூழ்நிலை தவிர்க்கப்பட்டது.
மேலும் இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பேருந்து சேவைகள் இல்லாததாலும், ஊரடங்கு இருப்பதாலும் புறநோயாளிகளின் வருகையின்றி, புறநோயாளிகளுக்கான அனுமதி சீட்டு வழங்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: சென்னையை முடக்க பரிந்துரை