திருநெல்வேலி: மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் பயன்படுத்தப்படும் ‘C20E11 MK III’ என்ற கிரையோஜெனிக் இன்ஜின் வெப்ப சோதனை மற்றும் உந்தும சோதனை இன்று (நவ.9) மாலை சுமார் மூன்று மணியளவில் நடைபெற்றது.
சுமார் 70 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை, முழு வெற்றி பெற்றதாக மகேந்திர கிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இயந்திரம்தான் கிரையொஜெனிக் என்ஜின் ஆகும்.
அதிக எடை கொண்ட செயற்கை கோள்களையும், அதனை விண்ணில் செலுத்தும் ராக்கெட்களை விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி இந்த இன்ஜினின் சூடான சோதனை மகேந்திர கிரியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 28 வினாடிகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இப்போது அடுத்த கட்ட சோதனை இன்று நடைபெற்றது. 70 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை, முழு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இயலும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு