கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்த மக்களுக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகளவில் காணப்படுகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, திருநெல்வேலிக்கு கடந்த 20 நாள்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகள் கண்டறிந்து ஸ்டிக்கர் ஒட்டும் பணி, மாநகராட்சி ஆணையர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவது மட்டுமின்றி 28 நாள்களுக்கு வெளியில் வர தடையும் விதித்துள்ளனர்.
மொத்தமாக, சுமார் 82 வீடுகளில் அலுவலர்கள் ஸ்டிக்கரை ஒட்டினர். அவர்கள் வெளியே வரமால் உள்ளார்களா என்பதை அப்பகுதி காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி - மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு!