தமிழ்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 27) ஒரே நாளில் 6 ஆயிரத்து 993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 284 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,057ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,500ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.