ETV Bharat / state

கரோனா பெருந்தொற்று: நெல்லையப்பர் ஆனி திருவிழா ரத்து - நெல்லையப்பர் கோயில்

நெல்லை: கரோனா பெருந்தொற்று காரணமாக பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

dfsafas
dfasdfasdfas
author img

By

Published : Jun 16, 2021, 2:32 AM IST

கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டதோடு கோயில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருவிழாக்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தென் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருப்பினும் திருவிழா நாள்களில் கொடியேற்றம் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இல்லாமல் சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராதனையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கோயில் முன்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு அரசு கரோனா நோய் தொற்று காரணமாக தடை விதித்துள்ள சூழலை கருத்தில் கொண்டு திருவிழா நாள்களில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை நெல்லையப்பர் கோயில் இணையதளத்திலும், சமூக வலைதள பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாட்டி மிகப்பெரிய மூன்றாவது தேரான நெல்லையப்பர் கோயில் தேர் வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாக நோய்தொற்று பரவலின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.