ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடை - திதி தர்ப்பணம்

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய  தடை
தாமிரபரணி ஆற்றில் தர்ப்பணம் செய்ய தடை
author img

By

Published : Jul 31, 2021, 9:32 PM IST

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், "நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத்தை முன்னிட்டும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் கூடுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் (ஆகஸ்ட் 1) ஒன்பதாம் தேதி வரை மேற்கண்ட கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், படித்துறைகளில் திதி தர்ப்பணம், பிற சடங்குகள் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

கோயில்களில் வழக்கம்போல் பூஜைகள் மட்டும் நடைபெறும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மதுரை: ஆடிக்கிருத்திகை நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.