திருநெல்வேலி மாவட்டம் சிவராம் கலைக்கூடம் சார்பில், 151ஆவது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறுவர்கள் அர்ஜுன் , ஹனிஸ்காஶ்ரீ ஆகிய இருவரும் காந்தியின் உருவத்தை 151 சதுர அடியில் வரைந்தனர். இந்த ஓவியம் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று (அக்.1) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் அங்கு வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் விழாவில் கலந்துகொண்ட தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.
விழாவில் காந்தி உருவத்தை வரைந்த சிறுவர்களை அழைத்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: காந்தி பிறந்தநாள்: குடியரசு தலைவர், பிரதமரின் செய்தி