ETV Bharat / state

வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த பாஜக துணைத் தலைவர்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்புமனுத் தாக்கல் செய்த பாஜக துணைத் தலைவர்!

author img

By

Published : Mar 13, 2021, 10:15 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (மார்ச்.12) காலை தொடங்கியது. அந்த வகையில், நெல்லை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலும், பாளையங்கோட்டை தொகுதிக்கு நெல்லை மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

இதில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் அல்லது சிறிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் திடீரென பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு நிலவியது. ஆனால், அவர் நேராக நெல்லை தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவரும் உதவி ஆட்சியருமான சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அதேசமயம், அவர் பாஜக நிர்வாகிகள் அல்லது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகள் என யாரையும் அழைக்காமல் தனது மகனை மட்டும் அழைத்துக் கொண்டு தனி ஆளாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். இதற்கிடையில் பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தது கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களுடன் அன்பாக குடும்பத்தில் ஒருவராக பழகி வருகிறேன். ஏற்கனவே இங்கு சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியபோது ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். தற்போது பாஜக சார்பில் மீண்டும் இங்கு போட்டியிடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் ராஜேந்திரன்

தொடர்ந்து, ’’பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத சூழ்நிலையில் நீங்கள் எப்படி வேட்புமனு தாக்கல் செய்தீர்கள்" என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "இன்று மாலை டெல்லியில் பட்டியல் அறிவிப்பார்கள்’’ என்று கூறினார். மேலும், "உங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பார்களா" என்று கேட்டதற்கு "எப்போதுமே எனக்கு அதிமுக ஆதரவு உண்டு" என்று பதில் அளித்தார். அதேபோல் நல்ல நாள் என்பதால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளரிடம் கூறினார்.

நெல்லை சட்டப்பேரவைத் தொகுதியை பாஜகவுக்கு கொடுக்கக்கூடாது என்று ஆரம்பத்தில் இருந்து உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதேசமயம், ஆரம்பத்தில் இருந்து நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் முனைப்பு காட்டி வந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிட, நயினார் நாகேந்திரன் அவசர அவசரமாக மனுத்தாக்கல் செய்திருப்பது நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குமரியில் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு; ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.