நடிகர் ரஜினிகாந்த் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையில் ரஜினியை பாஜகதான் இயக்கி வருவதாகவும், அவரது அரசியல் அறிவிப்புக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திருநெல்வேலி திருச்செந்தூர் கோயில் முருகன் கோயிலில் வேல் யாத்திரையை நிறைவு செய்த எல்.முருகனிடம் ரஜினி கட்சி தொடங்குவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், " ரஜினிகாந்த் வருகின்ற 31ஆம் தேதி கட்சி தொடங்கப்படும் என அவரே தெரிவித்துள்ளார். ரஜினிக்கு பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, அவர் கட்சி தொடங்கும்போது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி தொடக்கம்: அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்!