திருநெல்வேலி: திசையன்விளை பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகளைக் கொண்டது.
அதில் ஒன்பது இடங்களை அதிமுகவும், தலா இரண்டு இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும், தலா ஒரு இடத்தில் பாஜக மற்றும் தேமுதிகவும், மூன்று இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக வேட்பாளர் ஆதரவு
இதனிடையே பேரூராட்சித்தலைவர் பதவிக்கு ஏற்கெனவே பாஜக வேட்பாளர் லிவ்யா அதிமுகவினருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவினர் தங்களது தரப்பிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மிரட்டியதாகத் தெரிகிறது.
மேலும், 'அதிமுக கவுன்சிலர்கள் பதவி ஏற்க வரும்போது மண்டையை உடைப்போம்' எனத் திமுகவினர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
தலைக்கவசத்துடன் வருகை
இதனால் அதிமுகவினர் தலைக்கவசத்துடன் பேரூராட்சி அலுவலகத்திற்குள் பதவி ஏற்க வந்தனர்.
அப்போது அதிமுக தொண்டர்கள் பாதுகாப்புக்கருதி சாலையின் இருபக்கமும் நின்றனர்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் கங்கா மன நிம்மதியை தருகிறது; தமிழிசை சௌந்தரராஜன்