ETV Bharat / state

கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன்: நடிகர் அஜித்தின் தக்க்ஷா குழு கண்டுபிடிப்பு!

author img

By

Published : May 9, 2021, 9:02 AM IST

திருநெல்வேலி: நடிகர் அஜித் ஆலோசகராக உள்ள தக்க்ஷா குழுவினர் தயாரித்த புதிய ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

ajiths
ajiths

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமால் உருவாக்கப்பட்ட தக்க்ஷா( dhaksha) தொழில்நுட்பக் குழுவினர் பல்வேறு புதிய வகை ட்ரோன்களை தயாரித்து வருகின்றனர். இந்த குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித் உள்ளார். சமீபத்தில் அஜித் இக்குழுவினருடன் இணைந்தே ட்ரோன் கால்டாக்சி கண்டுபிடித்தனர்.

இந்த சூழ்நிலையில் தக்க்ஷா குழுவினர் தற்போது கரோனோ பேரிடருக்கு உதவும் வகையில் புதிய வகை ட்ரோனோ கண்டுபிடித்துள்ளனர். நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் கருவியை இந்தக் குழுவினர் கடந்த ஆண்டு கண்டுபிடித்தனர். முதல் கட்டமாக சென்னையில் இந்த வகை ட்ரோன் பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

கிருமி நாசினி தெளிக்கும் ட்ரோன்

அதன் தொடர்ச்சியாக நேற்று (மே 8) திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவினர் இந்த ட்ரோன் செயல்பாட்டை நடத்தி வருகின்றனர். வாகனங்களில் தெளிக்கப்படும் கிருமிநாசினிக்கும், ட்ரோன் மூலம் தெளிக்கப்படும் கிருமி நாசினிக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக இந்த குழுவினர் தெரிவித்தனர்.

அதாவது இந்த ட்ரோனில் கெமிக்கல் இல்லாத bio citro shild என்ற பயோ கிருமிநாசினி பயன்படுத்தப்படுகிறது. இந்த ட்ரோனில் ஒரு முறை 16 லிட்டர் கிருமிநாசினி நிரப்பும் திறன் இருக்கிறது மேலும் ஒருமுறை பறக்க விட்டால் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்டது என்று தக்க்ஷா குழுவினர் தெரிவித்தனர். கரோனோ காலகட்டம் என்பதால் அஜித் இந்த புதிய வகை ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தக்க்ஷா குழுவின் பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது, "கரோனோ இரண்டாம் கட்ட அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இந்த புதிய ட்ரோனை கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் பாளையங்கோட்டை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த ட்ரோனை பயன்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படும், நடிகர் அஜித் எங்கள் குழுவின் சிறந்த ஆலோசகராக இருந்து வருகிறார். அடுத்து தயாரிக்க உள்ள புது திட்டத்தில் அஜித்தை கண்டிப்பாக அழைப்போம்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.