திருநெல்வேலி: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை தான் ஆடிப் பெருக்கு.
இந்த நாளில் செய்யும் செயல்கள் பல்கிப் பெருகும் என்பதும்; இன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை. உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் விதை விதைத்து விவசாயப் பணியினை தொடங்குவார்கள்.
உற்சாகமிழந்த ஆடிப்பெருக்கு
அந்த வகையில் இன்று (ஆக.3) தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா, கரோனா காரணமாக எளிமையாக கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலியில் ஜீவ நதியான தாமிரபரணியில் மக்கள் நதிக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி வணங்குவது வழக்கம். அதே போல் நதிக்கரையோரத்தில் புது மணப்பெண்ணுக்கு தாலி பிரித்து கட்டும் நிகழ்வும் நடைபெறும்.
ஆனால், கரோனா பரவல் காரணமாக பொது மக்கள் நதிக்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பெரும்பாலனோர் வீடுகளிலேயே பூஜை செய்தனர். இருப்பினும் சிலர் ஆற்றுப் பகுதிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: தீரன் சின்னமலை நினைவு தினம் - முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை