ETV Bharat / state

கறுப்பு சட்டையுடன் அதிமுகவினர் உண்ணாவிரதம்: பொதுமக்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை - speedy completion of highway works

திருநெல்வேலியில் கிடப்பிலுள்ள நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அதிமுக எம்எல்ஏ உண்ணாவிர போரட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ‘மக்களை திசை திருப்பும் வேலையை நிறுத்துங்கள்’ என பொதுமக்கள் ஒட்டிய போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 9, 2022, 9:10 PM IST

திருநெல்வேலி முதல் பாபநாசம் வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக, அம்பாசமுத்திரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் சேரன்மகாதேவியில் இன்று (நவ.9) உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் கிடப்பிலுள்ள நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அதிமுகவினர் உண்ணாவிரதம்

ஆனால், இதற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில், திட்டமிட்டபடி இன்று சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா மற்றும் திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா உட்பட அதிமுக தொண்டர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு சட்டையுடன் அதிமுகவினர் உண்ணாவிரதம்: பொதுமக்கள் ஒட்டிய ஒற்றை போஸ்டரால் வீணாகியதே!

இதையடுத்து அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பில் ஈடுப்பட்ட காவல் துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட அதிமுகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொகுதி மக்களின் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து, காவல் துறையால் இசக்கி சுப்பையா கைது செய்யப்பட்டிருக்கும் அதே வேளையில், சேரன்மகாதேவி பகுதியில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் அதிமுகவினரின் உண்ணாவிரதம் குறித்து ஒட்டிய ஒற்றை போஸ்டர்..

அதில் “உங்கள் நாடகத்தை நிறுத்துங்கள் எம்எல்ஏ... சென்னையில் செட்டில் ஆன எம்எல்ஏ உங்களுக்கு... ஓட்டு போட்ட அம்பாசமுத்திரம் மக்களை என்றைக்காவது நினைத்து பார்த்தது உண்டா? திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் சாலைப் பணிகளை கடந்த ஆட்சியில் உங்கள் கட்சிக்காரருக்கு கொடுத்துவிட்டு கட்சிக்காரரை கண்டிக்காமல், தொடர்ந்து மக்களை திசை திருப்பும் நாடகத்தை உடனே நிறுத்துங்கள். இப்படிக்கு சேரன்மகாதேவி ஊர் பொதுமக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திறந்த பாலத்தையே மீண்டும் திறந்த திமுகவினர்; அதிமுக எம்எல்ஏவை எதிர்ப்பதாக காமெடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.