ETV Bharat / state

Tirunelveli Nurse murder: நடுரோட்டில் நர்ஸ் எரித்துக்கொலை; கணவர் வெறிச்செயல்.. நெல்லையில் நடந்தது என்ன?

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புணிபுரிந்து வந்த செவிலியரை, மருத்துவமனை அருகே வைத்து அவரது கணவரே தீ வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli government hospital nurse burned and killed by husband police arrest and investigate
அரசு மருத்துவமனை அருகே செவிலியர் எரித்துக் கொலை; கணவர் வெறிச்செயல்
author img

By

Published : May 5, 2023, 10:18 AM IST

Updated : May 5, 2023, 10:44 AM IST

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவர் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்தை தழுவி தனது பெயரையும் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவி அய்யம்மாள் (45). திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.நேற்று(04.05.2023) காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அவரை கணவர் பாலசுப்பிரமணியன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்ற போது, மருத்துவமனை அருகே உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வைத்து கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவன் - மனைவி சண்டையை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்த்துள்ளனர். வாய் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் அய்யம்மாளை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தான் வைத்திருந்த மண்ணெணெய்(Kerosene) கேன் கொண்டு அய்யம்மாள் தலையில் ஓங்கி அடித்ததோடு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: கள்ள காதலியை எரித்துக்கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

இச்சம்பவத்தில் பாலசுப்பிரமணியனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பிச் சென்றார். இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், பாளையங்கோட்டை போலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பாலசுப்பிரமணியனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் நேற்று இரவு சரண் அடைந்தார். அவரை பாளையங்கோட்டை அழைத்து வந்து, மனைவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடுரோட்டில் வைத்து மனைவியை, கணவரே குத்தி, எரித்துக்கொலை செய்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: TN Governor: திராவிட மாடலை காலாவதியாக்க ஆளுநர் திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி!

Last Updated : May 5, 2023, 10:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.