ETV Bharat / state

நெல்லை அருகே காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ - போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் - Fire at Government Teacher Training Institute

திருநெல்வேலி மூலக்கரைப்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவி காடு முழுவதும் தீப்பற்றி மளமளவென பரவியது.

நெல்லை அருகே காட்டுப்பகுதியில் விடிய விடிய பற்றி எரிந்த தீயால் பரபரப்பு!

author img

By

Published : Oct 9, 2022, 10:02 PM IST

திருநெல்வேலி அடுத்த மூலக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (அக்.08) திடீரென காட்டுத்தீ பரவியது. காற்று வீசியதால் காய்ந்து கிடந்த சறுகுகளில் தீப்பற்றி மளமளவென பரவியது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து நாங்குநேரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மூலக்கரைப்பட்டி காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நெல்லை அருகே காட்டுப்பகுதியில் விடிய விடிய பற்றி எரிந்த தீயால் பரபரப்பு!

ஆனால் காட்டுத்தீ நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வந்ததால் திசையன்விளையில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், விடிய விடிய பற்றி எரிந்த தீயை இன்று (அக். 9) அதிகாலை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

இதையும் படிங்க:டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ராஜினாமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.