நெல்லை: ஆங்கிலேய ஆட்சி காலத்திலும் தமிழர் ஒருவரின் தனி மனித கொடையால் திருநெல்வேலி-பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் வகையில் 760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 வளைவுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த பாலம் இலண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை ஒத்த வடிவமைப்பில் கட்டுபட்டு 180 ஆண்டுகள் கடந்துள்ளது.
இந்த பாலம் கட்ட 1884-ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் முழு தொகையும் தான் தருவதாக அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிரஸ்தாராக இருந்த சுலோச்சனா முதலியார் ஒப்புக்கொண்டு கட்டபட்டதன் நினைவாக பாலத்திற்கு அவரது பெயரும் வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இன்றளவும் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் 180-ஆவது பிறந்தநாள் விழா இன்று (நவ.27) கொண்டாடி வரும் நிலையில், நேற்று(நவ.26) நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல வண்ணங்களில் ஒலித்தது. இதனை இருசக்கர நான்கு சக்கர வாகனங்களின் செல்வோரும் பேருந்துகளில் செல்வோரும் வியந்து பார்த்து சென்றனர்.
இதையும் படிங்க: திமுக கொடியை பயன்படுத்தி வரைந்த உதயநிதி ஸ்டாலின் உருவப்படம்