ETV Bharat / state

கஞ்சா கடத்தல் - இளைஞர் கைது! - திருநெல்வேலி மாவட்டம் செய்திகள்

நெல்லை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
author img

By

Published : Apr 27, 2021, 9:45 PM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை- தூத்துக்குடி சாலையில் மாவட்ட நீதிமன்றம் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மடக்கி சோதனையிட்டபோது, அவரது பையில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த சங்கர் என்பதும், கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

கஞ்சா கடத்தல் -  இளைஞர் கைது!
கஞ்சா கடத்தல் - இளைஞர் கைது!

இளைஞரை கைது செய்த காவல்துறையினருக்கு மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

கஞ்சா கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.