நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளம் சங்கு நகரில் வசித்துவருபவர் பாலன். ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலரான இவர் தனது, மனைவி, மற்றும் மகனுடன் வசித்துவருகிறார். இந்நிலையில், பாலன் தனது மனைவியுடன் கேரளாவிற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு வந்த பாலனின் மகன் விபின், முன்பக்க கதவு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ஒரு லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பணகுடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.