ETV Bharat / state

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்த முதியவரை கொலை செய்த இளைஞர் கைது - தேனியில் முதியவரை கொலை செய்த இளைஞர் கைது

தேனி: பெரியகுளம் அருகே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு முதியவருக்கு தொந்தரவு கொடுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

youth-arrested
youth-arrested
author img

By

Published : Dec 19, 2020, 9:26 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பொன்ராம் (75). இவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டின் படுக்கையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அவரது மகள் மாரியம்மாள் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சடலத்தை கைப்பற்றிய தேவதானப்பட்டி காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வு அறிக்கையில், முதியவர் பொன்ராம் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முதியவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(26) என்பவர் தனது நண்பருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது

மேலும், நண்பருக்கு திருமணம் நடைபெற்றதால் மதுபோதையில் இருந்த அருண்குமார், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு முதியவரை தொந்தரவு செய்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பொன்ராமின் கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து, அருண்குமாரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.