ETV Bharat / state

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சைக்கிள் போட்டி

தேனி: பெரியகுளத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது.

Women's Day 2020
Womens Day cycle rally in theni
author img

By

Published : Mar 8, 2020, 5:57 PM IST

Updated : Mar 8, 2020, 11:40 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள விளையாட்டுக் கழகம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

போட்டியில் ’ஏ’ மற்றும் ’பி’ என்று இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ’ஏ’ பிரிவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவிகளும், ’பி’ பிரிவில் அனைத்து மகளிரும் கலந்துகொண்டனர். தென்கரை நூலகத்தில் இருந்து சோத்துப்பறை சாலையில் உள்ள குழாய் தொட்டி வரை சென்று மீண்டும் அங்கிருந்து திரும்பி நியூ கிரவுண்ட் வரை 6 கி.மீ. தூரம் வரை சைக்கிள் போட்டி நடைபெற்றது.

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சைக்கிள் போட்டி

அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான நடைபயிற்சி போட்டியும் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுச் சான்றிதழ், ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள், பெண்கள் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.

இதையும் படிங்க: மோடியின் ட்விட்டரில் சென்னை பெண்!

Last Updated : Mar 8, 2020, 11:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.