ETV Bharat / state

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்கி வைக்கப்படுமா? அதில் உள்ள சிக்கல்கள் என்ன?

142 அடி வரை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அனையில் நீர் மட்டம் தேக்கப்படுமா? அல்லது மத்திய அரசின் ரூல் கர்வ் முறைப்படி தேக்கி வைக்கப்படுமா? என்ற கேள்வி தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அனையின் நீர் மட்டம் தேக்கபடுமா? தேக்கி வைக்கபடுமா?

author img

By

Published : Jul 15, 2022, 10:50 PM IST

தேனி: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலே சர்ச்சைகளுக்கும், போராட்டங்களுக்கும் பஞ்சமே இருக்காது.

அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த பல்வேறு சட்டப்போராட்டங்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டங்களின் பலனாக 142 அடி நீரை அணையில் தேக்கி வைத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பெற்று தற்போது வரை 142 அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 142 அடி நீரை அணையில் தேக்கி வைக்கக்கூடாது என பல்வேறு வகைகளிலும் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மத்திய நீர் வள ஆணையம் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பழமையான அணைகளில் Rule Curve முறைப்படி அணையின் நீர் மட்டம் தேக்கப்படும் என அறிவித்து அந்த அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் அந்த விதிப்படி தேக்கிவைக்கப்பட்டது.

இந்த முறைக்கு தமிழ்நாடு விவசாயிகள் கடும் எதிர்ப்புத்தெரிவித்த நிலையிலும், இதே முறைப்படி முல்லைப்பெரியாறு அனையின் நீர் மட்டம் 142 அடியாக சில நாள்கள் தேக்கி வைக்கப்பட்டது.

Rule Curve முறை என்பது உச்ச நீதிமன்றத்தினால் அளித்த ஒரு உத்தரவின்பேரில் மத்திய நீர் வள ஆணையம் இந்தியாவில் உள்ள பழமையான அணைகளில் நீர் மட்டத்தைக் கண்காணித்து, நீர் வரத்திற்கு ஏற்ப, நீர் மட்டம் இருப்பதை உறுதி செய்யும் அறிவியல் முறைதான் Rule Curve முறையாகும்.

இதன்படி கனமழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு, ஏற்படும் சமயங்களில் அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், வெவ்வேறு பருவ கால சூழலுக்கு ஏற்ப அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், அணையில் எவ்வளவு நீர் எவ்வளவு உயரத்திற்கு தேக்க வேண்டும், எவ்வளவு நீர் அப்போது வெளியேற்ற வேண்டும் என்பதை 10 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யும் அட்டவணைக்குப் பெயர் தான் Rule Curve.

இந்தச்சூழலில் தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்புப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு விநாடிக்கு 8,143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் தற்போதைய நீர் மட்ட உயரம் 133.20அடியாக உள்ளது. அணை பகுதியில் பெய்யும் கன மழையினால் இன்னும் சில நாள்களில் 136 அடியினை எட்ட வாய்ப்பு உள்ளது.

இந்தச்சூழலில் 142 அடி வரை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டம் தேக்கப்படுமா? அல்லது மத்திய அரசின் Rule Curve முறைப்படி தேக்கி வைக்கப்படுமா? என்ற கேள்வி தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் வரத்து அதிகரிப்பினால் கிடுகிடுவென உயரும் அணையின் நீர் மட்டம் அணையின் நீர் மட்டத்தை அளவிடும் Rule Curve முறை இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டு அதன் அடிப்படையில் நீர் மட்டம் தேக்கி வைக்கப்படுமா? அல்லது 142 அடி நீர் தேக்கி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா? என சந்தேகத்தில் உள்ளனர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள்.

இதையும் படிங்க:Video: கனமழை காரணமாக கோவை குற்றால அருவி, நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.